இந்திய திரைப்படத்திற்கான அங்கீகாரம் : கமல்
ADDED : 143 days ago
உலக திரைப்படத் துறையின் உயரிய விருதாகக் கருதப்படுவது ஆஸ்கர் விருது. 2025ல் வெளியாகும் படங்களுக்கான 98வது ஆஸ்கர் விருது விழா அடுத்த வருடம் மார்ச் மாதம் நடைபெற உள்ளது. ஆஸ்கர் விருதுக்கு படங்களை தேர்வு செய்யும் குழுவில் உறுப்பினராக சேர நடிகர் கமலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்காக பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் எக்ஸ் தளத்தில் கமல் வெளியிட்ட பதிவில், ‛‛ஆஸ்கர் அகாடமியில் இணைவது பெருமை. இந்த அங்கீகாரம் எனக்கானது மட்டுமல்ல, இந்திய திரைப்படம் மற்றும் என்னை வடிவமைத்த ஏராளமான கதை சொல்லாளர்களுக்கும் சொந்தமானது. இந்திய சினிமா உலகிற்கு வழங்க நிறைய உள்ளது. உலகளாவிய திரைப்பட சமூகத்துடன் ஈடுபட ஆர்வமாய் உள்ளேன். என்னுடன் தேர்வான சக கலைஞர்களுக்கும் வாழ்த்துகள்'' என குறிப்பிட்டுள்ளார்.