இங்கே ஹோம்லி, அங்கே கவர்ச்சி : ராஷ்மிகாவின் அடடே பாலிசி
மைசா என்ற படத்தில் பழங்குடி இன பெண்ணாக நடிக்கிறார் ராஷ்மிகா மந்தனா. அந்த படத்தில் அவர் கேரக்டரும் வித்தியாசமாக இருக்குமாம். சமீபத்தில் வந்த குபேரா படத்தில் கவர்ச்சி காண்பிக்காமல் பக்கா ஹோம்லியாக வந்தார். அவருக்கும், விஜய் தேவரகொண்டாவுக்கும் விரைவில் திருமணம் அதனால் இப்படிப்பட்ட படங்களில் நடிப்பதாக ஒரு தரப்பும், தனக்கு நடிக்க தெரியும், தான் கவர்ச்சி பொம்மை அல்ல என டைரக்டர், ரசிகர்களுக்கு காண்பிக்க இப்படி நடிப்பதாக இன்னொரு தரப்பும் சொல்கிறது. எது எப்படியோ அவர் சம்பளம் 8 முதல் 10 கோடியாம்.
தமிழ், தெலுங்கில் இப்படி நடிப்பவர், ஹிந்தியில் படு கவர்ச்சியில் நடிக்க தயங்குவது இல்லை. அந்த மார்க்கெட்டை தக்க வைக்க அப்படி நடிக்க வேண்டியது இருக்கிறது. மும்பையில் விழாக்கள் நடந்தால் கூட கவர்ச்சி உடையில்தான் செல்ல வேண்டியது இருக்கிறது. அப்போதுதான் நாலு பேர் மதிப்பார்கள், பல போட்டோ, வீடியோகிராபர்கள் சுற்றி வருவார்கள் என்பது ராஷ்மிகா கருத்தாக இருக்கிறது.