சூர்யா பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் தெலுங்கு 'அயன்'
ADDED : 93 days ago
கடந்த 2009ம் ஆண்டில் கே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, தமன்னா, பிரபு இணைந்து நடித்து வெளியான படம் 'அயன்'. இப்படம் அந்தக் காலகட்டத்தில் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் தெலுங்கு பதிப்பில் 'வீடோக்கடே' என்கிற தலைப்பில் வெளியாகி தெலுங்கு பதிப்பில் மட்டும் 100 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடியது.
தற்போது கிட்டத்தட்ட 16 வருடங்களுக்கு பிறகு அயன் படத்தின் தெலுங்கு பதிப்பான 'வீடோக்கடே' படத்தை ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் வருகின்ற ஜூலை 19ம் தேதியன்று சூர்யாவின் 50வது பிறந்த நாள் ஜூலை 23ம் தேதி கொண்டாடுவது முன்னிட்டு ரீ ரிலீஸ் செய்வதாக அறிவித்துள்ளனர்.