அசோக் செல்வன் புதிய பட அப்டேட்!
ADDED : 92 days ago
நடிகர் அசோக் செல்வன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவர். வித்தியாசமான கதை களத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
அசோக் செல்வன் அடுத்து குறும்பட இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை 'டூரிஸ்ட் பேமிலி, குட் நைட்' ஆகிய படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க கீர்த்தி சுரேஷ் மற்றும் அன்னா பென் இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். யார் தேதி கிடைக்கிறதோ அவர்களை ஒப்பந்தம் செய்வார்கள் என்கிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பை ஆகஸ்ட் மாதத்தில் தொடங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.