திருமணம் குறித்து ஸ்ருதிஹாசன் சொன்ன பதில்
ADDED : 92 days ago
தமிழில் ‛கூலி, டிரெயின், ஜனநாயகன்' போன்ற படங்களில் நடித்து வரும் ஸ்ருதிஹாசன் அடுத்தபடியாக ‛சலார் 2' படத்தில் நடிக்கப் போகிறார். அவ்வப்போது காதல் சர்ச்சைகளில் சிக்கி வரும் ஸ்ருதிஹாசன் தற்போது திருமணம் குறித்து கேள்விக்கு ஒரு பதில் கொடுத்துள்ளார். அதில், காதலிப்பது எனக்கு பிடித்தமான விஷயம். என்றாலும் இதுவரை எனக்கு மிகவும் பிடித்தமான நபரை நான் சந்திக்கவில்லை. திருமணம் குறித்தும் இன்னும் நான் யோசிக்கவும் இல்லை. திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் எனக்கு இல்லை. என்றாலும் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று தெரியவில்லை. ஒருவேளை அதற்கான சூழல் வந்தால் திருமணம் செய்து கொள்ள வாய்ப்பு இருக்கிறது என்று கூறியிருக்கிறார் ஸ்ருதிஹாசன்.