அஜித் தோவல் வேடத்தில் மாதவன்
ஹிந்தியில் ஆதித்ய தர் இயக்கத்தில் சஞ்சய் தத், மாதவன், அக்ஷய் கண்ணா, ரன்வீர் சிங், சாரா அர்ஜுன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகிவரும் படம் துரந்தர். இந்த படத்தில் ரன்வீர் சிங்குக்கு ஜோடியான சாரா அர்ஜுன் நடிக்கிறார். இவர் தமிழில் ஏ.எல்.விஜய் இயக்கிய சைவம், தெய்வத்திருமகள் போன்ற படங்களில் முக்கியத்துவம் வாய்ந்த குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். பின்னர் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் சிறு வயது நந்தினி வேடத்தில் நடித்தார். அதேபோல் ஹிந்தியிலும் அவர் சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.
இந்நிலையில் துரந்தர் படத்தில் நடிகர் மாதவன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் வேடத்தில் நடிக்கிறார். இந்த வேடத்திற்காக அஜித் தோவலை போலவே மாதவனின் தோற்றம் மாற்றப்பட்டுள்ளது. அதுகுறித்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது இந்த படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.