உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / முதல் படத்திலேயே அதிர்ச்சி தோல்வியை சந்தித்த சூர்யா சேதுபதி

முதல் படத்திலேயே அதிர்ச்சி தோல்வியை சந்தித்த சூர்யா சேதுபதி

விஜய் சேதுபதி நடித்த நானும் ரவுடிதான், சிந்து பாத் போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் அவரது மகனான சூர்யா சேதுபதி. ஸ்டன்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்கிய பீனிக்ஸ் வீழான் என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமானார் சூர்யா சேதுபதி. கடந்த நான்காம் தேதி திரைக்கு வந்த இந்த படத்தில் சண்டை காட்சிகள் சிறப்பாக இருந்தாலும் படத்தின் கதையை சொதப்பி விட்டார்கள். இதன் காரணமாக இந்த படம் வசூல் ரீதியாக பின்னடைவை சந்தித்துள்ளது. அந்த வகையில் இப்படம் திரைக்கு வந்த முதல் நாளில் 10 லட்சம் மட்டுமே வசூலித்த நிலையில் அடுத்தடுத்த நாட்களில் தியேட்டர்கள் காத்தாடி கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதனால் முதல் படமே சூர்யா சேதுபதிக்கு அதிர்ச்சி தோல்வியாக அமைந்திருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !