3 மொழிகளில் தயாராகும் 'ஏழுமலை'
ADDED : 139 days ago
கன்னடம், தமிழ், தெலுங்கு என 3 மொழிகளில் தயாராகும் படம் ஏழுமலை. தருண் கிஷோர் தயாரிக்கும் இந்த படத்தை புனித் ரங்கசாமி இயக்குகிறார். கன்னட நடிகை ரக்ஷிதாவின் தம்பி, ராமண்ணாவும், மகாநதி புகழ் பிரியங்கா ஆச்சார் நாயகியாகவும் நடிக்கிறார்கள். இவர்களுடன் ஜகபதி பாபு, நாகபரணா, கிஷோர் குமார், சர்தார் சத்யா, ஜகப்பா நடிக்கிறார்கள். அத்வைதா குருமூர்த்தி ஒளிப்பதிவு செய்கிறார், இமான் இசை அமைக்கிறார்.
படத்தின் தலைப்பு டீசர், பெங்களூருவில் வெளியிடப்பட்டது. கன்னட நடிகர் சிவராஜ்குமார் இந்த டீசரை வெளியிட்டு, படக்குழுவுக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.