உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு

குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு

வட நாட்டில் கொண்டாடப்படும் பாரம்பரிய வழிபாடு குரு பூர்ணிமா. இது ஒவ்வொரு இந்துக்களும், தங்களது குருமார்கள், ஆசிரியர்கள் உயிரோடு இருந்தால் அவர்களுக்கு மரியாதை செய்தும், இறந்திருந்தால் வழிபாடு செய்தும் கொண்டாடுவார்கள்.

அந்த வகையில் நேற்றுமுன்தினம் குரு பூர்ணிமா கொண்டாடப்பட்டது. வட நாட்டின் பல வீடுகளில் அமிதாப் பச்சனின் சிலைகள், உருவ பொம்மைகள் வைத்து குரு பூர்ணிமாக கொண்டாடி உள்ளனர். குறிப்பாக கோல்கட்டாவில் ஒரு வீட்டில் அவரது சிலையை வைத்து வழிபாடு செய்து குரு பூர்ணிமாவை கொண்டாடினர்.

தனது படங்களின் மூலம் நல்ல கருத்துக்களை பேசி பலருக்கு அவர் குருவாக இருந்திருக்கிறார். அதனால் அமிதாப்பச்சனை தங்களது மானசீக குருவாக ஏற்று மரியாதை மற்றும் வழிபாடு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !