உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கூலி ரிலீஸ் தேதி கவுன்ட் டவுன் போஸ்டர் வெளியானது

கூலி ரிலீஸ் தேதி கவுன்ட் டவுன் போஸ்டர் வெளியானது

வேட்டையன் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியாக இருக்கும் படம் கூலி. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ரஜினியுடன் இணைந்திருப்பதால் இந்த படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு எழுந்துள்ளது. அது மட்டுமல்ல, நடிகர்கள் அமீர்கான், நாகார்ஜுனா, உபேந்திரா உள்ளிட்ட பல மொழிகளை சேர்ந்த முன்னணி நட்சத்திரங்களும் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்தில் இருந்து சமீபத்தில் அனிருத் இசையில் வெளியான மோனிகா பாடலும் அதற்கு நடிகை பூஜா ஹெக்டே மற்றும் சவுபின் சாஹிர் ஆகியோரின் அதிரடி நடனமும் தான் தற்போது சோசியல் மீடியாக்களில் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது.

ஆகஸ்ட் இரண்டாம் தேதி இந்த படத்தின் டிரைலர் வெளியாக இருக்கிறது. ஆகஸ்ட் 14ஆம் தேதி இந்த படம் வெளியாக இருக்கும் நிலையில் இன்னும் 30 நாட்களே இருக்கிறது என்று இந்த படத்தின் புதிய கவுண்ட் டவுன் போஸ்டர் ஒன்றை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !