பிரேமலு ஹீரோவின் புதிய படப்பிடிப்பை துவங்கி வைத்த பஹத் பாசில்
மலையாளத்தில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு நடிகர் வினித் சீனிவாசன் நடிப்பில் முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ் என்கிற திரைப்படம் வெளியானது. ஒரு வழக்கறிஞர் மருத்துவமனையில் செயல்படுத்தப்படும் இன்சூரன்ஸ் பின்னனியில் எவ்வளவு கிரிமினலாக செயல்பட்டு பண மோசடி செய்கிறார் என்பதை மையப்படுத்தி உருவாகி இருந்த இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதை இயக்குனர் அபினவ் சுந்தர் நாயக் என்பவர் இயக்கியிருந்தார்.
இந்த நிலையில் தற்போது தனது அடுத்த படமாக அவர் மோலிவுட் டைம்ஸ் என்கிற பெயரில் புதிய படத்தை இயக்க உள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் துவக்க விழா பூஜை நடைபெற்றது. இந்த நிகழ்வில் நடிகர் பஹத் பாசில் கலந்து கொண்டு அடித்து துவக்கி வைத்தார். கதாநாயகனாக பிரேமலு படம் புகழ் நஸ்லேன் நடிக்கிறார். சினிமா பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தின் கதையை, சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ரேகசித்திரம் படத்தின் இணை கதாசிரியர் ராமு சுனில் என்பவர் எழுதுகிறார்..