தெலுங்கு படத்தில் விலைமாதுவாக நடிக்கும் கயாடு லோஹர்
ADDED : 138 days ago
டிராகன் படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் கயாடு லோஹர். அடுத்து அதர்வாவுடன் இதயம் முரளி படத்தில் நடித்துள்ளார். இதுதவிர சிம்பு 49வது படம் உள்பட இரண்டு தமிழ் படங்களில் கமிட்டாகியுள்ளார். அதைத்தொடர்ந்து தெலுங்கில் நானியுடனும் நடிக்க கமிட்டாகி உள்ளார். ஏற்கனவே தெலுங்கில் அல்லூரி என்ற படத்தில் ஸ்ரீ விஷ்ணுவுக்கு ஜோடியாக நடித்த கயாடு, தற்போது நானிக்கு ஜோடியாக தி பாரடைஸ் என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் ஒரு அழுத்தமான விலைமாது வேடத்தில் நடிப்பவர், இப்படம் எனக்கு தெலுங்கு சினிமாவில் ஒரு திருப்புமுனை படமாக அமையும் என்று நம்புகிறார்.