வாசகர்கள் கருத்துகள் (1)
இந்த ஆட்சியில் அனைத்து துறைகளிலும் கொடுக்கப்படும் விருதுகள் எல்லாம் அந்த கட்சியைச் சேர்ந்தவர்களுக்கே கொடுக்கப்படுகிறது... உதாரணம் ஆசிரியர்களுக்கு கொடுக்கப்படும் நல்லாசிரியர் விருதுகளில் அப்படி ஒரு அரசியல்....
தமிழக அரசின் திரைப்பட விருதுகள் 2016ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை வெளியான படங்களுக்கு கடந்த வாரம் அறிவிக்கப்பட்டன. விருது பெற்றவர்கள் தமிழக அரசுக்கு சந்தோஷத்துடன் நன்றி தெரிவித்துள்ளார்கள். விருது கிடைக்காதவர்கள் தங்கள் அதிருப்தியை, நியாயமான முறையில் கேள்வியாக கேட்டு வருகிறார்கள்.
அந்தவகையில் இயக்குனர் சேரன் தனது எக்ஸ் தளத்தில், ''பெண்களுக்கு இலவச பாஸ், வறுமையில் இருக்கும் குடும்பங்களுக்கு உதவித்தொகை, திருமணத்திற்கு அரசு உதவி, இதெல்லாம் செய்கிறது அரசு. பெரும் பணம் இல்லாத குடும்பங்களில் கடன் படாமல் சிக்கனமாக எப்படி திருமணம் நடத்தப்பட வேண்டும். வாழ்க்கைக்கான சேமிப்பாக எப்படி அதை மாற்றலாம் என்ற கருத்தோடு விளம்புநிலை மக்களுக்கான படமாக உருவாக்கப்பட்டிருந்த 'திருமணம்' திரைப்படம் தேர்வு குழுவினரால் கண்டு கொள்ளப்படாமல் போனது. அவர்களின் நுண்ணிய பார்வை அற்ற தன்மையை அல்லது தங்களை சார்ந்துள்ளவர்களுக்கு மட்டுமே விருது கொடுக்கும் தன்மையை காட்டுகிறது.
அரசிற்கு வரி கட்டி வாக்களித்து நாங்களும் இந்த சமூகத்தில் வாக்காளர்கள் என்ற உரிமையில் எனக்கும் கேட்டும் உரிமை இருக்கிறது. இனி எவருக்கும் இது போல் நடக்க கூடாது நேர்மையான முறையில் பாரபட்சமின்றி யாரும் ஒதுக்கப்படாமல் விருதுகள் சென்றடைய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். அரசுகள் மாறலாம். அரசின் நிலைப்பாடு என்றும் பாரபட்சமாக இருக்க கூடாது என்பதை வலியுறுத்துகிறேன் ''என்று முதல்வரை டேக் செய்து தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.
இந்த ஆட்சியில் அனைத்து துறைகளிலும் கொடுக்கப்படும் விருதுகள் எல்லாம் அந்த கட்சியைச் சேர்ந்தவர்களுக்கே கொடுக்கப்படுகிறது... உதாரணம் ஆசிரியர்களுக்கு கொடுக்கப்படும் நல்லாசிரியர் விருதுகளில் அப்படி ஒரு அரசியல்....