உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 5 ஆண்டுகளாக வெற்றிக்கு ஏங்கும் சிம்பு

5 ஆண்டுகளாக வெற்றிக்கு ஏங்கும் சிம்பு


இன்று நடிகர் சிம்புவின் 42வது பிறந்த நாள். நடிகர், இயக்குனர்,பாடகர் என பன்முக திறமை கொண்ட சிம்பு 40 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வருகிறார் என்பது ஆச்சரியமான உண்மை. ஆம், 2 வயதில் இருந்தே நடித்து வருகிறார். ஆனாலும் கடந்த 5 ஆண்டுகளாக வெற்றிக்காக ஏங்குகிறார்..

மாநாடு படத்துக்குபின் அவருக்கு வெற்றி கிடைக்கவில்லை. அவர் நடித்த 'வெந்து தணிந்தது காடு, பத்து தல, தக்லைப்' படங்கள் வெற்றி பெறவில்லை. இப்போது வெற்றி மாறன் இயக்கத்தில் 'அரசன்' படத்தில் நடித்து வருகிறார். அடுத்து, அஸ்வத் மாரிமுத்து, தேசிங்கு பெரியசாமி, 'பார்க்கிங்' பாலகிருஷ்ணன் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

இந்த ஆண்டு இதில் ஏதாவது ஒரு படம் வெளியாகுமா என்பது சந்தேகமே. அரசன் படப்பிடிப்பு இப்போதுதான் தொடங்கி உள்ளது. மற்ற படங்கள் ஆரம்பிக்கப்படவே இல்லை. இதற்கிடையில் ஒரு படம் இயக்கவும் சிம்பு விரும்புகிறாராம். திருமணம் குறித்து எந்த முடிவையும் எடுக்காமல் இருக்கிறாராம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !