உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 25 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛மின்னலே'

25 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛மின்னலே'

மாதவன், அப்பாஸ், ரீமா சென் , விவேக் உள்ளிட்டோர் நடிப்பில் 2001ல் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் ‛மின்னலே'. இந்த படத்தில் தான் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்குனராகவும், இசையமைப்பாளராக ஹாரிஸ் ஜெயராஜும் அறிமுகமாகினர். இவர்கள் கூட்டணியில் வெளியான முதல்படமே வெற்றியையும், வரவேற்பையும் பெற்றது. குறிப்பாக இதில் இடம்பெற்ற ‛வசீகரா, வெண்மதி, அழகிய தீயே, இவன் யாரோ' உள்ளிட்ட பாடல்கள் சூப்பர் ஹிட்டாகின.

இந்த படம் வெளியாகி 25 ஆண்டுகளை கடந்துள்ளது. அதேப்போல் கவுதம் மேனன், ஹாரிஸ் ஆகியோரும் சினிமாவில் 25 ஆண்டுகளை நிறைவு செய்தனர். இதை கொண்டாடும் விதமாக கவுதம் மேனனுக்கு பாராட்டு நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இந்நிலையில் ‛மின்னலே' படத்தை ரீ-ரிலீஸ் செய்கின்றனர். இன்றைய டிஜிட்டல் தரத்தில் படத்தை மெருகேற்றி காதலர் தினத்தை முன்னிட்டு வரும் பிப்., 13ல் படத்தை ரீ-ரிலீஸ செய்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !