உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இருமுடியை தொடர்ந்து ரவி தேஜா நடிக்கும் புதிய படம் துலாபாரம்

இருமுடியை தொடர்ந்து ரவி தேஜா நடிக்கும் புதிய படம் துலாபாரம்

சிவா நிர்வானா இயக்கத்தில் ரவி தேஜா நடித்து கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வெளியான படம் இருமுடி. இப்படம் 250 கோடி வசூலித்தது. அதையடுத்து விவேக் ஆத்ரேயா இயக்கும் படத்தில் நடிக்கப் போகிறார் ரவி தேஜா. இதற்கு துலாபாரம் என டைட்டில் வைத்திருப்பதாக தற்போது அறிவித்துள்ளார்கள்.

இப்படத்திற்கு இசையமைக்க இளம் இசையமைப்பாளர் விவேக் சாகர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே விவேக் ஆத்ரேயா - விவேக் சாகர் கூட்டணி இணைந்து சூப்பர் ஹிட் பாடல்களை தந்துள்ளனர். இவர்கள் மீண்டும் இணைந்திருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இம்முறை இக்கூட்டணி ரவி தேஜாவுடன் இணைவது இந்த படத்தின் மீதான சுவாரசியத்தை மேலும் அதிகரித்துள்ளது. தற்போது தயாரிப்பாளர்கள் படத்திற்கு முந்தைய தயாரிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !