உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இன்றைய பெண்கள் விழிப்புணர்வுடன் பேசத் துவங்கி உள்ளனர் - சமந்தா பேச்சு

இன்றைய பெண்கள் விழிப்புணர்வுடன் பேசத் துவங்கி உள்ளனர் - சமந்தா பேச்சு

ஐதராபாத்தில் வசிக்கும் சமந்தா சினிமா நிகழ்ச்சிகள், தனியார் நிகழ்ச்சிகள் என்றால் மட்டுமே சென்னை வந்து போகிறார். இப்போது கர்ப்பமாக இருப்பதால் படத்தில் நடிக்கவில்லை. சில நாட்களாக சென்னையில் நடக்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இன்று காலை சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில் ''பெண்கள் தங்களது உடல், ஹார்மோன் ஆரோக்கியம், கருவுறுதல், மனநலம், தூக்கம் மற்றும் மன அழுத்தம் போன்ற விஷயங்கள் குறித்து விழிப்புணர்வுடனும் தயக்கமின்றியும் பேசத் தொடங்கியுள்ளனர். முந்தைய தலைமுறையினர் மாதவிடாய் மற்றும் உடல்நலப் பிரச்னைகளை வெளியில் சொல்லாமல் சகித்துக் கொண்டனர். ஆனால் தற்போதைய தலைமுறையினர் சிறந்த தீர்வுகளையும் ஆரோக்கியமான மாற்று வழிகளையும் கேள்வி கேட்கத் தொடங்கியுள்ளனர்'' என்று தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சி தொடர்பாக நடந்த பெண்கள் உடல்நலம் சம்பந்தப்பட்ட கருத்தரங்கிலும் கலந்து கொண்டு பேசினார். தனது டயட் குறித்தும் பேசினார். இந்த நிகழ்ச்சியில் ஆசிய விளையாட்டுக் போட்டியில் 42 ஆண்டுகளுக்குப் பிறகு பி.டி.உஷாவின் சாதனையை சமன் செய்து முறியடித்து சாதனை படைத்த தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜை கட்டியணைத்து பாராட்டினார் சமந்தா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !