உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பாக்கெட் நாவல் படப்பிடிப்பு நிறைவு

பாக்கெட் நாவல் படப்பிடிப்பு நிறைவு

பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்த ‛பத்தா' படம் ஓரளவு வெற்றி அடைந்துள்ளது. விமர்சன ரீதியாகவும் பலர் பாராட்டுவதால் விஜய் சேதுபதி ஹேப்பி. இந்நிலையில், தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் அவர் நடித்து வந்த பாக்கெட் நாவல் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. அதை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். எப்போது ரிலீஸ் என தெரியவில்லை.

ஏற்கனவே மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த டிரைன், பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் நடித்த ஸ்லம்டாக் படங்கள் ரிலீசுக்கு பல மாதங்களாக தயாராக இருக்கிறது. இப்போது பாக்கெட் நாவலும் விரைவில் அந்த பட்டியலில் சேர உள்ளது.

இப்போது மணிரத்னம் இயக்கும் இஞ்சி வெல்லம் படத்தில் நடித்து வருகிறார். அடுத்து பாலா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக தகவல். இந்த படங்கள் தவிர, கிருத்திகா உதயநிதி இயக்கும் படத்திலும் நடிக்க உள்ளார். நித்திலன் இயக்கும் மகாராஜா 2விலும் நடிக்கப் போகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !