விவாதத்திற்கு உள்ளான ஜான்வி கபூரின் நடுவிரல் சைகை போட்டோ
ஜான்வி கபூர் அடிக்கடி தனது பயணங்கள், நிகழ்ச்சிகள் மற்றும் தொழில் சார்ந்த புகைப்படங்களைப் பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் பாரிஸில் நடைபெற்ற பேஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர், இந்த வாரத் தொடக்கத்தில் அந்தப் பயணத்தின் பல புகைப்படங்களைப் பகிர்ந்திருந்தார். தற்போது அவர் மேலும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ள நிலையில், அதில் ஒரு குறிப்பிட்ட புகைப்படம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அந்த புகைப்படத்தில், ஜான்வி கபூர் கோட் அணிந்து, கருப்பு கூலிங் கிளாஸ் உடன் தனது நடுவிரலைக் காட்டி உள்ளார். இந்த சைகை சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. இந்த சைகை தன்னை இணையத்தில் கேலி செய்பவர்களைக் குறி வைத்துச் செய்யப்பட்டதா? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
சமீபத்தில் ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட ஜான்வி கபூரின் ஆபாசமான வீடியோ இணையத்தில் பரவியதால் சங்கடமான சூழலை எதிர்கொண்டார். இந்த சைகைக்குப் பின்னால் உள்ள பின்னணியை ஜான்வி கபூர் வெளிப்படுத்தவில்லை என்றாலும், இணையத்தில் தன்னைத் தொடர்ந்து குறி வைப்பவர்களுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாகவே அவர் இவ்வாறு செய்திருக்கலாம் என்று சமூக வலைதளப் பயனர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.