இந்த மாதம் ரீ ரிலீஸ் ஆகும் உயிர் உள்ளவரை உஷா
ADDED : 2 days ago
கடந்த 1983ம் ஆண்டில் டி.ராஜேந்தர் எழுதி, இயக்கி, நடித்து, இசையமைத்து வெளியான படம் 'உயிர் உள்ளவரை உஷா' . இதில் சரிதா, கங்கா, நளினி உள்ளிட்டோர் முதன்மை வேடத்தில் நடித்திருந்தனர். இந்த படத்தின் மூலம் தான் டி. ராஜேந்தர், நளினி என இருவரும் முதன்மை நடிகர்களாக அறிமுகமானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த காலகட்டத்தில் இப்படம் மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இப்படத்தை தெலுங்கு டப்பிங் செய்தனர். பின்னர் ஹிந்தி, கன்னடத்தில் ரீமேக் செய்தனர். தற்போது 43 வருடங்களுக்கு பிறகு உயிர் உள்ளவரை உஷா படத்தை பிப்ரவரி மாதத்தில் நவீன தொழில்நுட்பத்துடன் ரீ ரிலீஸ் செய்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். ஏற்கனவே கடந்த செப்டம்பரில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டனர். பணிகள் முடியாததால் இப்போது பிப்ரவரியில் வெளியிடுகின்றனர்.