சந்தானத்தின் புதிய படம் பற்றிய தகவல்
ADDED : 55 days ago
நடிகர் சந்தானம் தமிழில் தொடர்ந்து கதாநாயகனாக படங்களில் நடித்து வருகிறார். அதில் ஒரு சில படங்கள் வெற்றி பெறுகிறது. ஒரு சில படங்கள் தோல்வியை தழுவுகிறது. தற்போது ஓரிரு படங்களில் காமெடியாக நடிக்க முன் வந்துள்ளார். இதற்கிடையே அடுத்து இவர் புதிதாக ஒரு படத்தில் நாயகனாக நடிக்கவுள்ளார். கடந்த 2024ம் ஆண்டில் தமிழில் குறைந்த பட்ஜெட்டில் புதுமுக நட்சத்திரங்களை வைத்து வெளியான படம் 'பராரி'. இதை எழில் பெரியவேடி என்கிற அறிமுக இயக்குனர் இயக்கியிருந்தார். இவர் தான் சந்தானத்தின் அடுத்த படத்தை இயக்குகிறாராம். இதுதொடர்பான பேச்சுவார்த்தை நடந்துள்ளது என்றும், விரைவில் இப்படம் குறித்து அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.