உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஸ்ரீதேவியுடன் நடித்தேன், அவர் மகளுடனும் நடித்து விட்டேன் : ரவிகிஷன் பெருமிதம்

ஸ்ரீதேவியுடன் நடித்தேன், அவர் மகளுடனும் நடித்து விட்டேன் : ரவிகிஷன் பெருமிதம்


தெலுங்கில் ராம்சரண் நடிப்பில், புச்சிபாபு சனா இயக்கத்தில் உருவாகியுள்ள 'பெத்தி' திரைப்படம் வரும் ஜூன் 4ம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்தில் ஜான்வி கபூர் கதாநாயகியாக நடித்துள்ளார். சிவராஜ்குமார், ரவிகிஷன் உள்ளிட்ட பிறமொழி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதில் நடித்துள்ள போஜ்புரி நடிகரான ரவிகிஷன் சமீபத்திய புரமோஷன் நிகழ்வு ஒன்றில் பேசும்போது, ஜான்வி கபூரை பார்க்கும்போது எனக்கு அவரது அம்மா ஸ்ரீதேவியுடன் நடித்த நாட்கள் ஞாபகத்திற்கு வருகின்றன என்று கூறினார்.

கடந்த 1996ல் ஹிந்தியில் வெளியான 'ஆர்மி' திரைப்படத்தில் ஸ்ரீதேவியுடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ரவிகிஷன். அப்போது ரவிகிஷன் சினிமாவில் அறிமுகமான காலகட்டம் அது. கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு பிறகு தற்போது ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூருடனும் தான் நடித்துள்ளதை பெருமையாக நினைப்பதாக கூறியுள்ள ரவிகிஷன், அம்மாவைப் போலவே ஜான்வி கபூரும் தன் தொழில் மீது மிகுந்த அக்கறையும் கவனமும் செலுத்தி நடிப்பதை பார்க்க முடிந்தது என்று பாராட்டியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !