உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விமர்சனங்களால் பிக்அப் ஆகும் 'பிளாஸ்ட்'

விமர்சனங்களால் பிக்அப் ஆகும் 'பிளாஸ்ட்'


அறிமுக இயக்குனர் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில், ரவி பஸ்ரூர் இயக்கத்தில், அர்ஜுன், ப்ரீத்தி முகுந்தன், அபிராமி மற்றும் பலர் நடிப்பில் மே 28ல் வெளியான படம் 'பிளாஸ்ட்'.

இப்படத்திற்கு ரசிகர்களிடம் இருந்தும், விமர்சகர்களிடம் இருந்தும் நல்ல வரவேற்பு கிடைத்தது. பட வெளியீட்டிற்கு முன்பு இந்தப் படத்தை யாரும் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. படம் வெளிவந்த பின்புதான் இப்படி ஒரு படம் வந்திருக்கிறது என்பதே பலருக்கும் தெரியும்.

விமர்சனங்களால் இந்தப் படத்திற்கு ஒவ்வொரு நாளும் வரவேற்பு அதிகமாகி வருவதாக தியேட்டர்காரர்கள் பலரும் தெரிவித்து வருகின்றனர். இரண்டு வாரங்களுக்கு முன்பாக 'கருப்பு' படம் வந்து நல்ல வரவேற்புடன் இப்போதும் ஓடிக் கொண்டிருக்கிறது. அதோடு வெளியூருக்குச் சென்றவர்கள் ஊருக்குத் திரும்பி வரும் வாரம் இது. இவற்றின் காரணமாக 'பிளாஸ்ட்' படம் 'ஹவுஸ்புல்' ஆக ஓடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சரியான இடைவெளியில் வந்திருந்தால் இந்தப் படம் இன்னும் அதிக வசூலைக் கொடுத்திருக்கலாம் என பாக்ஸ் ஆபீஸில் தெரிவிக்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !