புதுமுகங்களின் 'தி கிளப்'
புதுமுகங்கள் இணைந்து உருவாக்கி வரும் படம் 'தி கிளப்'. போஸ் மூவீஸ் என்ற நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தை புதுமுக இயக்குனர் சஞ்சு அம்ப்ரோஸ் இயக்குகிறார். இப்படத்திற்கு ஒளிப்பதிவு முரளி, இசை ராஜீவ் ரவி. மேலும் இப்படத்தில் நாயகனாக புதுமுகம் சஜன் நடிக்க நாயகியாக மீனாட்சி நடிக்கிறார். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் அஜித் மற்றும் தினேஷ் நடிக்கிறார்கள்.
படத்தைப் பற்றி இயக்குனர் கூறியதாவது: ஒரு பெண் நடன கலைஞர் கையில் பழமையான புத்தகம் ஒன்று கிடைக்கிறது. அதில் ஒரு கிராமத்தில் காதலிக்க மறுத்த ஒரு பெண்ணை ஓர் இளைஞன் கொன்றான் என்று எழுதப்பட்டுள்ளது. அதன் உண்மை தன்மையை அறிய அந்த கிராமத்திற்கு செல்கிறார் அந்த நடனக் கலைஞர்.
ஆவியாக வந்து எல்லோரும் பயமுறுத்துவதாக அந்த ஊர் மக்கள் கூற அதனை மேலும் அவர் ஆராயும் போது அப்பெண் இயற்கைக்கு அப்பாற்பட்ட மர்மத்தில் சிக்கிக் கொண்டது தெரிய வருகிறது. ஆம் அவள் தீய ஆவிகள் உலா வரும் உயிருள்ளவர்களுக்கும் இறந்தவர்களுக்கும் இடையிலான ஒரு இடத்தில் மாட்டிக் கொண்டது தெரிய வருகிறது.
அந்தப் பெண்ணை அவள் காப்பாற்றினாளா, இல்லை வேறு பிரச்சனையில் சிக்கினாளா என்பதை சொல்லும் படம். இப்படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் உள்ள ஆலப்புழாவில் தொடங்கி, பெங்களூர்,மைசூர் மற்றும் கோயம்புத்தூர் படபிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளோம். என்றார்