உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஹைதராபாத்தில் அனிருத் நடத்தும் 'கூலி' இசை நிகழ்ச்சி!

ஹைதராபாத்தில் அனிருத் நடத்தும் 'கூலி' இசை நிகழ்ச்சி!


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி, நாகார்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, ஸ்ருதிஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கூலி'. இந்த படத்தின் 'சிக்கிட்டு' என்ற பாடல் எதிர்பார்த்தபடி ஹிட் அடிக்காத நிலையில், அதன்பிறகு பூஜா ஹெக்டே நடனத்தில் வெளியான 'மோனிகா' என்ற பாடல் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது. இப்படம் ஆகஸ்ட் 14ம் தேதி திரைக்கு வருவதால் தற்போது படக்குழு புரமோஷன் நிகழ்ச்சிகளை தொடங்கி இருக்கிறது.

இந்த நிலையில் இதுவரை ஹைதராபாத்தில் எந்த ஒரு இசை நிகழ்ச்சியும் நடத்தாத அனிருத் தற்போது முதல் முறையாக இந்த கூலி படத்தை விளம்பரப்படுத்த வேண்டும் என்பதற்காக ஒரு சிறப்பு இசை நிகழ்ச்சியை நடத்த தயாராகி வருகிறார். லட்சக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் நடைபெறும் இந்த இசை நிகழ்ச்சியின்போது கூலி படக்குழுவினரும் கலந்து கொண்டு படத்தை புரமோஷன் செய்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !