சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது!
ADDED : 137 days ago
'அமரன்' படத்தை அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் 'மதராஸி', சுதா கொங்கரா இயக்கும் 'பராசக்தி' என்ற இரண்டு படங்களில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இதில் மதராஸி படப்பிடிப்பு முடிந்து விட்டதை அடுத்து பராசக்தியில் நடித்து வருகிறார். மேலும், சிவகார்த்திகேயனிடத்தில் வெங்கட் பிரபுவும் ஒரு கதை சொல்லி இருந்தார்.
இந்த நிலையில் தற்போது எனது அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். அப்படத்தின் படப்பிடிப்பு வருகிற அக்டோபர் மாதத்திலிருந்து தொடங்குகிறது என்று தெரிவித்துள்ளார் வெட்கட் பிரபு. அதனால் கைவசம் உள்ள படங்களில் நடித்து முடித்ததும் வெங்கட்பிரபுவுடன் சிவகார்த்திகேயன் இணைவார் என்பது தெரிய வந்திருக்கிறது. அதோடு வெங்கட்பிரபு இயக்கும் பெரும்பாலான படங்களுக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வந்த நிலையில் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.