தனுஷ் பிறந்த நாளில் தெலுங்கில் ரீ ரிலீஸ் ஆகும் ‛மயக்கம் என்ன'
ADDED : 321 days ago
கடந்த 2011ம் ஆண்டில் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளியான படம் 'மயக்கம் என்ன'. இந்த படம் விமர்சகர்களால் கொண்டாடப்பட்டு ரசிகர்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை.
கடந்த 2017ம் ஆண்டில் ‛மயக்கம் என்ன' படத்தை தெலுங்கில் டப்பிங் செய்து 'மிஸ்டர் கார்த்திக்' எனும் தலைப்பில் வெளியாகி அங்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
தற்போது கிட்டத்தட்ட 8 வருடங்களுக்குப் பிறகு ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் மிஸ்டர் கார்த்திக் படத்தை வருகின்ற ஜூலை 27ந் தேதியன்று தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு ரீ ரிலீஸ் செய்வதாக அறிவித்துள்ளனர்.