பேண்டஸி காதல் ஜானரில் உருவாகும் கவின் 9வது படம்!
ADDED : 46 days ago
நடிகர் கவின் அடுத்து அவரது 9வது படத்தில் நடிக்கவுள்ளார். இதனை அறிமுக இயக்குனர் கென் ராய்சன் இயக்குகிறார். இதில் கவின் உடன் இணைந்து பிரியங்கா மோகன் என இருவரும் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு ஓப்ரோ இசையமைக்கிறார். இதனை தின்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர்.
சமீபத்தில் இந்த படத்தை பூஜை நிகழ்வுடன் அறிவித்தனர். இத்திரைப்படம் காதல், காமெடி என கலந்து பேண்டஸி ஜானரில் உருவாகிறது. இந்த படத்தில் அதிகமான கிராபிக்ஸ் காட்சிகளும் இடம்பெறுகிறது. இதற்கான முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பை அக்டோபர் மாதத்தில் துவங்குகிறது என்கிறார்கள்.