உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரேஸில் விபத்தில் சிக்கிய அஜித் கார்!

ரேஸில் விபத்தில் சிக்கிய அஜித் கார்!


நடிப்பு, கார் பந்தயம் என இரட்டை சவாரி செய்யும் நடிகர் அஜித், தொடர்ந்து கார் பந்தயத்தில் கவனம் செலுத்தி வருகிறார். சில போட்டிகளில் அவரது ‛அஜித்குமார் ரேஸிங்' அணி வெற்றிப்பெற்றும் அசத்தியது.

இந்த நிலையில், இத்தாலியில் நடந்து வரும் ‛ஜிடி 4' யூரோபியன் சீரிஸ் கார் பந்தயத்தில் அஜித்குமார் பங்கேற்றிருந்தார். இந்த கார் பந்தயத்தில் அஜித் ஓட்டிச்சென்ற கார் விபத்தில் சிக்கியது. பந்தயத்தில் முன்னால் சென்ற கார் திடீரென டிராக்கின் குறுக்கே நின்றதால் அதன் மீது அஜித்தின் கார் மோதியது. இதில் அஜித் ஓட்டிய காரின் இடதுபுறம் சேதமடைந்து விபத்துக்குள்ளானது. கார் பந்தயத்தில் அவ்வப்போது விபத்தில் சிக்கும் அஜித், இந்த முறை வேறொரு காரின் தவறால், அதன்மீது மோதாமல் இருக்க முயன்றும் விபத்தில் சிக்கியது அவரது துரதிர்ஷ்டமாக பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !