மேலும் செய்திகள்
சுமாரான வரவேற்பில் அனுஷ்காவின் 'காட்டி'
47 days ago
குறைந்த காட்சிகளுடன் 4வது வாரத்தில் 'கூலி'
47 days ago
ஆந்திர மாநில துணை முதல்வராக இருக்கும் பவன் கல்யாண் நடித்து இந்த வாரம் ஜுலை 24ம் தேதி பான் இந்தியா படமாக வெளியாக உள்ள படம் 'ஹரிஹர வீரமல்லு'. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று காலை ஹைதராபாத்தில் நடைபெற்றது. இன்று மாலை வெளியீட்டிற்கு முந்தைய நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இன்று காலை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் தன் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் பற்றி வெளிப்படையாகப் பேசினார் பவன் கல்யாண்.
“அரசியல் ரீதியாக நான் இந்தியா முழுவதும் பிரபலமாக இருக்கலாம். ஆனால், நடிகராக எனது பிரபலம் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் மற்ற நடிகர்களை விடவும் குறைவுதான். எனது படங்களின் வியாபாரம் ஒப்பீட்டில் குறைவாகவே இருக்கும். அதனால்தான் இந்தப் படத்திற்கு ஆதரவு தர வேண்டும் என்று யோசித்து இங்கு வந்துள்ளேன்.
இந்தப் படம் பல சிக்கல்களை சந்தித்து வெளியாகிறது. இரண்டு கோவிட்டைக் கடந்தது. படத்தின் உருவாக்கத்தில் சில பல தடைகள் என இருந்தது. இருந்தாலும் அனைத்தையும் பொறுத்துக் கொண்டு பொறுமையாக சமாளித்து இந்தப் படத்தை வெளியிட உறுதியாக இருந்த தயாரிப்பாளர் ஏஎம் ரத்னம் அவர்களுக்காகவும் இங்கு வந்துள்ளேன். பல தமிழ்ப் படங்களை தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிட்டு நேரடிப் படங்களுக்குப் போட்டியாக வசூல் பெற வைத்தவர் அவர்.
அரசியல் வேலைகளுக்கு இடையில் இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் படப்பிடிப்புக்கு மட்டுமே 57 நாட்கள் நடித்துக் கொடுத்தேன். இந்தப் படத்திற்காக இயக்குனர் ஜோதி கிருஷ்ணா, ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஆகியோர் அவர்களது தூக்கத்தைத் தியாகம் செய்து வேலைக செய்துள்ளனர். நாயகி நிதி அகர்வால் தனி ஒருவராக இந்தப் படத்தின் புரமோஷனுக்காக பொறுப்பேற்று மனமுவந்து செய்து வருகிறார். சாதி, மதம் பார்க்காமல் இந்தத் திரையுலகம் பலருக்கும் வாய்ப்புகளை வழங்கி வருகிறது. திறமை உள்ள யாரும் வளரலாம். அதனால்தான் சினிமா மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு,” எனப் பேசினார்.
47 days ago
47 days ago