வார் 2 படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு
ADDED : 46 days ago
ஹிந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன் நடித்து கடந்த 2019ம் ஆண்டு வெளியான படம் வார். இதன் வெற்றியை தொடர்ந்து கடந்த வருடத்திலிருந்து வார் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. ஹிருத்திக் ரோஷனுக்கு வில்லனாக தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடித்துள்ளார்.
யஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க, அயன் முகர்ஜி இயக்கியுள்ளார். இத்திரைப்படம் இவ்வருடம் ஆகஸ்ட் 14ம் தேதியன்று திரைக்கு வருகிறது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கிய நிலையில் எந்தவொரு அறிவிப்புகள் வெளியாகாமல் இருந்தது. இப்போது ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இருவரும் அவர்களின் 25 வருட திரை பயணத்தை கடந்துள்ளனர். இதனால் இந்த படத்தின் டிரைலர் வருகின்ற ஜூலை 25ம் தேதியன்று வெளியிடுவதாக படக்குழு அறிவித்துள்ளனர்.