உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அக்டோபர் 31ம் தேதி 'காந்தாரா சாப்டர்-1' படத்தின் ஆங்கில பதிப்பு வெளியாகிறது!

அக்டோபர் 31ம் தேதி 'காந்தாரா சாப்டர்-1' படத்தின் ஆங்கில பதிப்பு வெளியாகிறது!


ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து கடந்த அக்டோபர் இரண்டாம் தேதி திரைக்கு வந்த படம் 'காந்தாரா சாப்டர்-1'. இப்படத்தில் அவருடன் ருக்மணி வசந்த், ஜெயராம் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். 125 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் இதுவரை உலக அளவில் 800 கோடி வரை வசூலித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும், இந்த காந்தாரா சாப்டர்-1 படத்தின் உலகளாவிய ஆங்கில வெளியீட்டை தற்போது அப்படக் குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. அதில், அக்டோபர் 31ம் தேதி இந்த படத்தின் ஆங்கில பதிப்பு வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு அசல் பதிப்பில் இருந்து அரை மணி நேர காட்சிகளை குறைத்துள்ளார்கள். அந்த வகையில், காந்தாரா சாப்டர்-1 படத்தின் ஆங்கில பதிப்பு 2 மணி நேரம் 14 நிமிடங்கள் 45 வினாடிகள் ரன்னிங் டைம் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !