உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரீ-ரிலீஸாகும் ‛தேவர் மகன்' பட பணிகள் : சிறுவன் பேசிய ‛கட்டபொம்மன்' வசனத்தால் அசந்து போன கமல்

ரீ-ரிலீஸாகும் ‛தேவர் மகன்' பட பணிகள் : சிறுவன் பேசிய ‛கட்டபொம்மன்' வசனத்தால் அசந்து போன கமல்

பழைய படங்களை ரீ-ரிலீஸ் செய்வது தமிழ் சினிமாவில் டிரெண்ட் ஆகி உள்ளது. ரஜினி, கமல், விஜயகாந்த், விஜய், அஜித் என பல நடிகர்களின் படங்கள் மீண்டும் டிஜிட்டலில் வெளியாகி வருகின்றன. அந்தவகையில் பரதன் இயக்கத்தில் 1992ல் வெளியான படம் ‛தேவர் மகன்'. கமலின் எவர்கிரீன் படங்களில் ஒன்றான இதில் சிவாஜி கணேசன், ரேவதி, கவுதமி, நாசர், வடிவேலு, சங்கிலி முருகன் உள்ளிட்ட பலர் நடித்தனர். இந்த படத்தை ரீ-ரிலீஸ் செய்யும் பணிகள் நடக்கின்றன. இன்றைய டிஜிட்டல் தரத்தில் படத்தை மெருகேற்றி வருகின்றனர்.

அதற்காக இந்த படத்தில் சில காட்சிகளை கூடுதலாக சேர்த்து ரீ-ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். குறிப்பாக இப்படத்தில் வரும் குழந்தைகள் கதாபாத்திரத்திற்கான வாய்ஸ் ஓவர்க்காக மதுரையை சேர்ந்த சிறுவர்கள் தேவ ஹர்சினி, முத்துமணி, கனிஷ்பா, வர்ஷிபா, சிவஸ்ரீ ஆகிய ஐவர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களை சென்னைக்கு அழைத்து சென்று நடிகர் கமல் முன்னிலையில் வாய்ஸ் ஓவர் செய்துள்ளனர். அதன் பின்னர் அந்த சிறுவர்களை சந்தித்த கமல், அவர்களுடன் உரையாடினார். அதில் சுட்டி பையன் பேசிய கட்டபொம்மன் படத்தின் வசனத்தை கண்டு அசந்து போனார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !