‛கேப்டன் பிரபாகரன்' ரீ-ரிலீஸ் : படப்பிடிப்பு அனுபவத்தை பகிர்ந்து ஆர்கே செல்வமணி
விஜயகாந்த்தின் 100வது படமான ‛கேப்டன் பிரபாகரன்', விஜயகாந்த்தின் 73வது பிறந்தநாளை முன்னிட்டு, ஆகஸ்ட் 22 அன்று ரீ-ரிலீஸ் ஆகிறது. சென்னை கோயம்பேடு விஜயகாந்த் நினைவிடத்தில் இந்த பட தேதி வெளியீட்டு விழா நிகழ்ச்சி நடந்தது.
அதில் பிரேமலதா கலந்து கொண்டு பேசுகையில் ''அந்த படத்தின் கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி எடுத்துக் கொண்டிருந்தபோதுதான் எங்களுக்கு முதல் மகனாக பிரபாகரன் பிறந்தான். அந்த படம் பெரிய வெற்றி பெற்றது. அப்போது நடந்த விஷயங்கள் என் மனதில் இன்றும் நினைவில் இருக்கிறது. சில படங்களை சென்டிமென்ட்டாக எங்கள் வீட்டில் படமாக்குவார் விஜயகாந்த். சாலிகிராமத்தில் உள்ள எங்கள் வீடு சின்னது. ஆனாலும், அதை திறமையாக படமாக்கினார் ஆர்.கே.செல்வமணி. அந்த சின்ன இடத்தில் விஜயகாந்த், ரம்யாகிருஷ்ணன் காட்சிகள் படமாக்கப்பட்டது'' என்றார்.