உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: மாதவி இரு வேடங்களில் நடித்த படம்

பிளாஷ்பேக்: மாதவி இரு வேடங்களில் நடித்த படம்

80களில் முன்னணி நாயகியாக இருந்தவர் மாதவி. அவரது கவர்ச்சி கண்களுக்காகவே ரசிகர்களால் விரும்பப்பட்டவர். அன்றைக்கு இருந்த முன்னணி நடிகர்கள் அனைவருடனும் ஜோடியாக நடித்தார். அவர் இரண்டு வேடங்களில் நடித்த ஒரே படம் 'ஜான்சி'.

பரபரப்பான ஆக்ஷன் பட இயக்குனராக இருந்த கர்ணன் இந்த படத்தை இயக்கினார். மாதவியுடன் நிழல்கள் ரவி, டாக்டர் ராஜசேகர், வினு சக்ரவர்த்தி, தேங்காய் சீனிவாசன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். சங்கர் கணேஷ் இசை அமைத்திருந்தார்.

இந்த படத்திற்கு கர்ணனே ஒளிப்பதவு செய்திருந்தார். இந்த படத்தில் இடம் பெற்றிருந்த ஒரு பாடலில் மாதவி இரண்டு வேடங்களிலும் ஆடினார். தொழில்நுட்பம் அதிகம் வளராத அந்த காலத்தில் ஒருவர் மடியில் ஒருவர் படுத்திருப்பது, கை குலுக்கி கொள்வது, கட்டிப்புரண்டு உருள்வது என பல புதுமைகளை செய்திருந்தார். படம் வெற்றி பெறவில்லை என்றாலும் இந்த பாடலும் காட்சியும் அப்போது பேசு பொருளாக இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !