உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / எம்ஜிஆர் - கருணாநிதி, நட்பு, மோதல் தழுவலில் 'காந்தா'?

எம்ஜிஆர் - கருணாநிதி, நட்பு, மோதல் தழுவலில் 'காந்தா'?


செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், ஜானு சந்தர் இசையமைப்பில், துல்கர் சல்மான், சமுத்திரக்கனி, பாக்யஸ்ரீ போர்சே மற்றும் பலர் நடிப்பில் தமிழ், தெலுங்கில் உருவாகி வரும் படம் 'காந்தா'. இப்படத்தின் டீசர் நேற்று வெளியானது. செப்டம்பர் 12ம் தேதியன்று இப்படத்தை வெளியிட உள்ளார்கள்.

கருப்பு வெள்ளை கால சினிமாவில் நடக்கும் ஒரு கதையாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. அந்தக் காலத்திய நாயகன் ஒருவருக்கும், இயக்குனர் ஒருவருக்கும் இடையிலான நட்பு, மோதல் ஆகியவை குறித்துத்தான் இந்தப் படம் இருக்கும் என்பது டீசரைப் பார்த்ததும் புரிகிறது.

அந்தக் காலத்தில் தமிழ் சினிமாவில் எம்ஜிஆர், கருணாநிதி இடையிலான மோதல் இப்படியுமாக இருந்தது. ஒருவேளை அதைத் தழுவி இந்தப் படத்தை எடுத்திருக்கலாமோ என்ற சந்தேகமும் வருகிறது. அது பற்றி மணிரத்னம் ஏற்கெனவே மோகன்லால், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய் நடிக்க 'இருவர்' படத்தை எடுத்து 1997ம் ஆண்டு வெளியிட்டார்.

படம் வெளிவந்த பிறகுதான் முழுமையாக என்ன மாதிரியான கதை என்பதும், ஏதாவது சர்ச்சையை ஏற்படுத்துமா என்பதும் போகப் போகத் தெரிந்துவிடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !