உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: டைட்டிலில் பெயர் போட்டுக்கொள்ளாத தயாரிப்பாளர்

பிளாஷ்பேக்: டைட்டிலில் பெயர் போட்டுக்கொள்ளாத தயாரிப்பாளர்


1930களில் பெரிய தயாரிப்பாளராக இருந்தவர் லேனா செட்டியார் என்று அழைக்கப்படும் எஸ்.எம்.லட்சுமணன் செட்டியார். உயர் ரக கார்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தார். சொந்தமாக பிரிண்டிங் பிரஸ் வைத்திருந்தார். அன்றைக்கு கோடீஸ்வரர்கள் மட்டுமே இருக்கும் கிளப்புகளில் மெம்பராக இருந்தார்.

தியாகராஜ பாகவதர் நடித்த 'பவளக்கொடி' படத்தின் மூலம் தயாரிப்பாளரான இவர் , அதன் பிறகு எம்.ஜி.ஆர் நடித்த 'மதுரை வீரன்', 'ராஜா தேசிங்கு', சிவாஜி நடித்த 'காவேரி', பி.யு.சின்னப்பா நடித்த 'கிருஷ்ண பக்தை' உள்ளிட்ட பல படங்களை தயாரித்தார். பெரும்பாலானவை வெற்றிப் படங்கள்.

ஆனால் எந்த படத்திலும் அவர் தயாரிப்பாளர் என்று தனது பெயரை போட்டுக் கொள்ளவில்லை. 'கிருஷ்ணா பிக்சர்ஸ் வழங்கும்' என்று அவரது கம்பெனி பெயர் மட்டுமே டைட்டில் கார்ட், விளம்பரம், பாட்டு புத்தகம் அனைத்த்திலும் போடப்பட்டிருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !