பாண்டிராஜ் இயக்கத்தில் அடுத்து நடிப்பது விஜய்சேதுபதியா? சூரியா?
ADDED : 117 days ago
தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நித்யா மேனன், யோகி பாபு நடிப்பில் திரைக்கு வந்துள்ள படம் 'தலைவன் தலைவி'. இப்படம் திரைக்கு வந்து நான்கு நாட்களில் 40 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல் தெரிவிக்கிறது. மேலும், இந்த படத்தை அடுத்து மீண்டும் கிராமத்து கதையில் ஒரு படத்தை இயக்கப் போகிறார் பாண்டிராஜ். அந்த படத்தையும் விஜய் சேதுபதியை வைத்தே இயக்க திட்டமிட்டுள்ளாராம்.
ஒருவேளை அவரது கால்சீட் உடனடியாக கிடைக்காத பட்சத்தில் தனது அடுத்த படத்தில் சூரியை நடிக்க வைக்கவும் ஒரு ஆப்சன் வைத்துள்ளாராம் பாண்டிராஜ். மேலும், தற்போது லைகா மற்றும் வேல்ஸ் இன்டர்நேஷனல் என்ற இரண்டு நிறுவனங்களிடமும் கதை சொல்லி ஓகே பண்ணி வைத்திருக்கிறார் பாண்டிராஜ்.