உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சினிமாவில் இது தான் எதார்த்தம் : திரிப்தி டிமிரி

சினிமாவில் இது தான் எதார்த்தம் : திரிப்தி டிமிரி

பாலிவுட்டில் பிரபலமான நடிகை திரிப்தி டிமிரி. அனிமல் படத்தில் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். இவர் அடுத்தப்படியாக பிரபாஸ் உடன் ‛ஸ்பிரிட்' படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க போகிறார். சினிமாவில் பின்புலம் முக்கியம் என்கிறார்.

இதுதொடர்பாக அவர் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது, ‛‛சினிமாவில் பின்புலம் இல்லையென்றால் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்காது. அடுத்தடுத்து இரு படங்கள் தோல்வி அடைந்துவிட்டால் காணாமல் போய் விடுவோம். இதுதான் எதார்த்தமான உண்மை. ஆதலால் நீங்கள் தேர்வு செய்யும் கதை மற்றும் கதாபாத்திர தேர்வில் முழு நம்பிக்கை வைத்து காத்திருங்கள்'' என்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !