உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பவன் கல்யாணுக்கு நன்றி சொன்ன கங்கனா ரணாவத்

பவன் கல்யாணுக்கு நன்றி சொன்ன கங்கனா ரணாவத்


சினிமாவிலிருந்து அரசியலுக்குச் சென்று எம்எல்ஏ ஆகி, தற்போது ஆந்திர மாநில துணை முதல்வராக இருப்பவர் பவன் கல்யாண். கடந்த வாரம் அவர் நடித்து வெளிவந்த 'ஹரிஹர வீரமல்லு' படத்திற்காக பல பேட்டிகளைக் கொடுத்தார். அப்போது எந்த பாலிவுட் நடிகையுடன் சேர்ந்து நடிக்க விருப்பம் என அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு கங்கனா ரணாவத் என பவன் பதிலளித்துள்ளார்.

சினிமாவிலிருந்து அரசியலுக்குச் சென்று தற்போது எம்.பி.யாகவும் இருப்பவர் கங்கனா. 'எமர்ஜென்சி' படத்தில் அவரது நடிப்பைப் பார்த்து வியந்ததாகவும், 'வலிமையான பெண் கங்கனா ரணாவத்' என்றும் பவன் கல்யாண் அவரைப் பாராட்டியுள்ளார்.

இதையடுத்து அந்த வீடியோவை தனது இன்ஸ்டா தளத்தில் பகிர்ந்து 'வணக்கம்' எமோஜிக்களுடன் நன்றி தெரிவித்துள்ளார் கங்கனா. இவர் பா.ஜ., எம்.பி., ஆக உள்ளார். பவன் கல்யாண் பா.ஜ., கூட்டணியில் உள்ளார். இருவருமே அதிரடியாகப் பேசக் கூடியவர்கள். இருவரும் சேர்ந்து ஒரு படத்தில் நடித்தால் அது நன்றாக இருக்கும் என ரசிகர்கள் கமெண்ட் செய்துள்ளார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !