மேலும் செய்திகள்
ஒரே படத்தில் 3 ஹீரோயின்கள்
57 days ago
நான் நடிகர் ஆன கதை : ரஞ்சித் சொன்ன பிளாஷ்பேக்
57 days ago
கரூர் சம்பவம்: காந்தாரா நிகழ்ச்சி ரத்து
57 days ago
தெலுங்கு நடிகரான மகேஷ் பாபு தற்போது ராஜமவுலி இயக்கி வரும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் வருகிற ஆகஸ்ட் 9ம் தேதி அவர் தனது 50வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அதனால் மகேஷ்பாபுவின் ரசிகர்கள் அவரது இந்த பிறந்த நாளை பிரமாண்டமாக கொண்டாட தயாராகி வருகிறார்கள்.
இந்நிலையில் அவரது பெங்களூரு ரசிகர்களோ, ஆகஸ்ட் 9ம் தேதி பெங்களூருவில் உள்ள பிருந்தா தியேட்டரில் ஒரு பிரமாண்ட விழாவை நடத்த திட்டமிட்டுள்ளார்கள். இந்த விழாவில் மகேஷ் பாபுவின் மகனான கட்டமனேனி கவுதம் கிருஷ்ணாவின் 35 அடி உயர பிரம்மாண்ட கட்அவுட் வைத்து அவருக்கு ஒரு விழா நடத்துகிறார்களாம். தற்போது மகேஷ் பாபுவின் மகன் அமெரிக்காவில் திரைப்படம் சார்ந்த படிப்பை படித்து வருவதோடு, தான் நடிக்கும் சில வீடியோக்களை அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். இன்னும் சில ஆண்டுகளில் அவர் வெள்ளித்திரையில் அறிமுகம் ஆவார் என்றும் கூறப்படுகிறது.
57 days ago
57 days ago
57 days ago