உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'?

100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'?


கடந்த சில வாரங்களில் 25க்கும் அதிகமான படங்கள் ரிலீஸ் ஆன நிலையில் அனிமேஷன் படமான 'மகாஅவதார் நரசிம்மா' 105 கோடி வசூலித்து முன்னணியில் இருக்கிறது. ஆனாலும் இந்த படம் தெலுங்கு, கன்னடம், இந்தியில் தான் அதிகம் வசூலித்தது. தமிழில் வெகு குறைவு. அதேபோல் விஜய்தேவரகொண்டா நடித்த 'கிங்டம்' படம் விமர்சன ரீதியாக பாராட்டு பெறவில்லை. ஆனால் அந்த படம் தெலுங்கில் 82 கோடி வசூலித்துள்ளது. தமிழில் கிங்டம் தோல்வி.

இங்கே பாண்டிராஜ் இயக்கிய 'தலைவன் தலைவி' 60 கோடி வரை வசூலித்துள்ளது. 100 கோடி அள்ளுமா என்பதில் சிக்கல் நீடிக்கிறது. மற்ற படங்கள் கோடிகளை கூட தொடவில்லை. சில படங்கள் சில கோடி வசூலித்தாலும் தோல்வி படங்கள் ஆகியுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !