விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்'
ADDED : 156 days ago
தமிழர்களின் அடையாளமாக கருதப்படுவது ஜல்லிக்கட்டு. மஞ்சுவிரட்டு, வட மஞ்சுவிரட்டு என பல்வேறு பெயர்களில் பல ஊர்களில் இது போன்ற நமது வீர விளையாட்டு நடக்கிறது. தற்போது இதை மையப்படுத்தி தமிழில் ஒரு படம் உருவாகிறது. அதன்படி, கேந்திரன் இயக்கத்தில் விமல் நடிக்கும் புதிய படத்திற்கு 'வடம்' என தலைப்பு வைத்துள்ளனர். இதில் சங்கீதா நாயகியாக நடிக்க முக்கிய வேடத்தில் பால சரவணன் நடிக்கிறார். டி. இமான் இசையமைக்கிறார். இந்த படத்தின் பூஜை கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள மாசாணி அம்மன் கோவிலில் பட பூஜையுடன் துவங்கியது. விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ளது.