உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி

துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி

மலையாள நடிகரான துல்கர் சல்மான் மலையாள சினிமாவை கடந்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழி படங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக துல்கர் சல்மான் தெலுங்கு மொழி படங்களில் நடிக்க அதிக ஆர்வம் காட்டுகிறார். இந்த வரிசையில் துல்கர் சல்மானின் 41வது படத்தை அறிவித்துள்ளனர். இதை இயக்குனர் ரவி நெலகுடிதி இயக்குகிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தை ஸ்ரீ லஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். படத்தின் பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் நானி, இயக்குனர்கள் ஸ்ரீகாந்த் ஒடிலா, புச்சி பாபு சனா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !