உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா

குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடித்துள்ள ‛கருப்பு' படத்தை அடுத்து தற்போது தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கும் தனது 46வது இடத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இதில் அவருடன் மமிதா பைஜு, பவானி ஸ்ரீ, ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் என பலரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். மேலும், தனது 50 வது பிறந்தநாளை சென்னையில் உள்ள தனது குடும்பத்தாருடன் கொண்டாடிய சூர்யா அதையடுத்து நேற்று அகரம் பவுண்டேஷனின் 15ம் ஆண்டு விழாவில் பங்கேற்றார். அதில் அவரது மனைவி ஜோதிகாவும் கலந்து கொண்டார். அதோடு சிவகுமார், கார்த்தி மற்றும் கமல்ஹாசன், இயக்குனர் வெற்றிமாறன் உள்ளிட்ட பலரும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்கள். இந்த நிலையில், இன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மனைவி ஜோதிகா மற்றும் பிள்ளைகள் உடன் சாமி தரிசனம் செய்தார் சூர்யா. இதுதொடர்பான போட்டோ, வீடியோ வைரலானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (2)

இளந்திரயன், வேலன்தாவளம்
2025-08-05 11:44:44

நுணலும் தன் வாயால் கெடும்.....


அசோகா
2025-08-05 08:06:12

நீ என்ன வேஷம் போல நம்ப மாட்டாங்க சித்திரக்..ள்ளா