ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ்
ADDED : 58 days ago
ரஜினி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் கூலி படம் ஆகஸ்ட் 14ம் தேதி திரைக்கு வர உள்ள நிலையில், இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினியின் கையில் 5821 என்ற எண் எழுதப்பட்ட பேட்ஜ் குறித்த ஒரு தகவலை தெரிவித்தார் லோகேஷ் கனகராஜ். அவர் கூறுகையில், ரஜினி நடித்த பல படங்களில் அவரது கையில் 777, 786 போன்ற பேட்ஜ்கள் இடம் பெற்றுள்ளன. ஆனால் இந்த கூலி படத்தில் 5821 என்ற பேட்ஜை வைத்தேன். இது குறித்து ஒரு நாள் ரஜினி சார் என்னிடத்தில் காரணம் கேட்டார். அப்போது அவரிடத்தில் என்னுடைய தந்தையும் ஒரு கண்டக்டர் தான். அவரது கூலி எண் 5821. அதைத்தான் இந்த பேட்ஜில் வைத்தேன் என்று சொன்னதும் அவர் ரொம்பவே ஆச்சர்யப்பட்டார் என்றார் லோகேஷ் கனகராஜ்.