ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன்
ஹிந்தியில் ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் ஆகிய இரண்டு ஸ்டார் நடிகர்களும் இணைந்து வார் 2 என்ற படத்தில் நடித்துள்ளார்கள். இந்த படம் ரஜினியின் கூலி படம் திரைக்கு வரும் அதே ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாகிறது. இதனால் தற்போது இப்படத்தில் சம்பந்தப்பட்டவர்கள் வார்-2 படம் குறித்த பிரமோஷன்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ஹிருத்திக் ரோஷன் அளித்துள்ள ஒரு பேட்டியில், ஜூனியர் என்டிஆர் உடன் நடித்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அவர் கூறுகையில், ஆர்ஆர்ஆர் நடிகருடன் பணிபுரிந்தது ஒரு நம்ப முடியாத அனுபவமாக இருக்கிறது. அவருக்கு எப்படிப்பட்ட காட்சி என்றாலும் ஒத்திகை கூட தேவை இல்லை. மிக சிறப்பாக சிங்கிள் டேக்கில் ஓகே செய்து விடுகிறார். அது என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது. அதோடு மிகச் சிறப்பாக நடனமாடக் கூடியவர். அவரது சிறப்பான நடனத்தை பார்த்து அசந்து போயிருக்கிறேன். அந்த வகையில் ஜூனியர் என்டிஆருடன் வார்-2 படத்திற்காக பணியாற்றியது பல வழிகளிலும் ஒரு கற்றல் அனுபவத்தை எனக்கு கொடுத்தது என்றார்.