மேலும் செய்திகள்
சிம்பு மீது அதிருப்தியில் தமன்?
57 days ago
மீண்டும் இணையும் மதகஜராஜா கூட்டணி
57 days ago
தமிழில் அகத்தியா படத்திற்கு பிறகு ராஷி கண்ணாவுக்கு புதிய பட வாய்ப்புகள் இல்லாத நிலையில், தெலுங்கு ஹிந்தியில் பிஸியாக நடித்து வருகிறார். சமீபத்தில் பவன் கல்யாண் உடன் உஸ்தாத் பகத்சிங் என்ற படத்தில் நடிப்பதற்கு கமிட்டான ராசி கண்ணா, தற்போது பாலிவுட்டில் பர்ஹான் அக்தருக்கு ஜோடியாக ‛120 பகதூர்' என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். போர் பின்னணியில் உருவாகும் இந்த படத்தை ரஷ்னீஸ் இயக்குகிறார்.
இதற்கு முன்பு ஹிந்தியில் நடித்த படங்களில் அழுத்தம் இல்லாத வேடங்களில் நடித்த ராசி கண்ணா, இந்த படத்தில் முக்கிய பெண் கதாபாத்திரமாக நடிக்க உள்ளார். மேலும் தற்போது தெலுங்கில் சித்து ஜோன்னலகட்டாவுடன் அவர் நடித்துள்ள தெலுசு கடா என்ற படம் வருகிற அக்டோபர் 17ஆம் தேதி திரைக்கு வருகிறது.
கடந்த காலங்களில் நான் நடித்த சில படங்கள் சரிவர அமையவில்லை. தற்போது தெலுங்கு மற்றும் ஹிந்தியில் கமிட்டாகி இருக்கும் படங்கள் எனக்கு புதிய நம்பிக்கையை கொடுத்துள்ளன. இந்த படங்கள் திரைக்கு வரும்போது இந்திய சினிமாவில் நானும் ஒரு முக்கியமான நடிகையாக இருப்பேன் என நம்புகிறார் ராஷி கண்ணா.
57 days ago
57 days ago