பிளாஷ்பேக்: தமிழ் ரசிகர்களை கவர்ந்த முதல் மலையாள லேடி சூப்பர் ஸ்டார்
தமிழ் சினிமாவின் ஆரம்ப காலங்களில் தெலுங்கு மற்றும் கன்னட நடிகைகளின் ஆதிக்கம் இருந்தது. சில மலையாள நடிகைகள் இருந்தாலும் அவர்கள் தமிழில் அறிமுகமாகி இங்கேயே நடித்து வந்தார்கள். ஆனால் மலையாள சினிமாவின் முதல் லேடி சூப்பர் ஸ்டார் என்று போற்றப்பட்டவர் மிஸ்.குமாரிக்கு தமிழில் தனி ரசிகர் வட்டம் இருந்தது. அவரது மலையாள படங்கள் டப் செய்யப்பட்டு இங்கு வெளியிடப்பட்டால் அதற்கென்று தனி ரசிகர்கள் இருந்தார்கள்.
திருவிதாங்கூரில் பிறந்த மிஸ்.குமாரி ஆடல், பாடல் கலைகளில் வல்லவராக இருந்தார். 1947ம் ஆண்டு 'வெல்லினகஸ்தரம்' என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகனார். 1954ம் ஆண்டு அவர் நடித்த 'நீலக்குயில்' அவரை உச்சத்திற்கு கொண்டு சென்றது. அஷ்டமசக்தி, அவகாசி, அல்போன்சா போன்ற படங்கள் வெள்ளிவிழா கொண்டாடியது, அன்றைய நட்சத்திரங்களான சிக்குரிச்சி சுகுமாறன் நாயர், பிரேம் நசீர், சத்யன் போன்றவர்கள் இவரது கால்ஷீட்டுக்காக காத்திருந்தார்கள்.
40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த மிஸ்.குமாரி தனது 37வது வயதில் காலமானார். அவர் பிறந்த ஊரான பாராங்கனத்தில் அவருக்கு நினைவு மண்டம் அமைக்கப்பட்டுள்ளது. அதனை பிரேம் நசீர் திறந்து வைத்துள்ளார். இவரது வாரிசுள் இப்போது வெளிநாடுகளில் உயர்ந்த நிலையில் இருக்கிறார்கள். இப்போதும் மலையாளத்தில் இருந்து நிறைய நடிகைகள் வந்தாலும் மிஸ் குமாரி போன்ற அழகான நடிகை வரவில்லை என்பார்கள் கேரளவாசிகள். தமிழில் காஞ்சனா, பெற்றவள் கண்ட பெருவாழ்வு என்ற இரண்டு படங்களில் மட்டுமே நடித்தார்.