தமிழில் வாய்ப்பு தேடும் ஐஸ்வர்யா மேனன்
தொடக்க காலத்தில் மளமளவென படங்களில் நடித்து வந்த ஐஸ்வர்யா மேனனுக்கு திடீரென வாய்ப்புகள் குறைந்தது. தெலுங்கு, கன்னட படங்களில் கவனம் செலுத்தினார். தமிழில் 5 ஆண்டுகளுக்கு முன்பு வந்த 'நான் சிரித்தால்' படத்தில் நாயகியாக நடித்தார், அதன்பிறகு 'வேழம்' என்ற படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்தார். அதன்பிறகு அவருக்கு தமிழில் வாய்ப்புகள் அமையவில்லை. 'ஸ்பை' என்ற தெலுங்கு படத்தில் ஆக்ஷன் ஹீரோயினாக நடித்தார், கடந்த ஆண்டு 'பாஜி வாயு வேகம்' என்ற படத்தில் நடித்தார்.
என்றாலும் ஐஸ்வர்யா மேனனுக்கு தமிழில் நடிக்கவே ஆர்வம். இதனால் தற்போது தீவிரமாக தமிழ் வாய்ப்புகளை தேடி வருகிறார். இதற்காக தனியாக போட்டோ ஷூட் நடத்தி அதனை சமூக ஊடகங்களில் வெளியிட்டிருப்பதோடு தனது மேலாளர் மூலம் வாய்ப்பும் தேடி வருகிறார். ஒரு படத்தின் பேச்சுவார்த்தை முடிந்திருப்பதாகவும், விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் தெரிகிறது.